உலகில் பலவகைப்பட்ட நோய்கள் காணப்படுகின்றன. அதில் மிக முக்கியமான ஒருநோய்தான் இந்த மனநோயாகும். சிந்த னைக்கும் மனநோய்க்கும் தொடர்புண்டு என்கின்றனர் அறிஞர்கள். கல்விக்கு மிகப் பெரும் தடையாக அமைவது இந்த மனநோயே. ஆதலால்தான் உளம் சம்பந்தமான விளக்கங்களை ஆய்ந்தறிந்து உளநலத்தின் குறைபாடு, மாறுபாடு போன்ற இன்னோரன்ன விடயங்களை கண்டறிந்து, கற்பிக்க வேண்டியது ஆசிரியர்களது கடமையாகும்.
பாடசாலையில் ஒரு பிள்ளைக்கு கற்பிக்கின்றபோது ஆசிரியர் அவனது உளநிலையை அறிந்து கற்பிக்கின்றபோதுதான் அந்தக் கல்வியில் பயனுண்டு. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோர் வித்தில் உளத்தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம். அதனை முறியடித்து வெற்றி கொண்டு வாழ்வில் முன்னேறவேண்டும். மனநோய்க்கு தாழ்வு மனப்பான்மையே முக்கிய காரணமாகும் என ‘அட்லரின் கொள்கை’ கூறுகி;ன்றது. மனித உடலானது நோயினால் பாதிக்கப்படும் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மனமும் நோய்க்குள்ளாகும் என்பதுபற்றிய விளக்கத்தை முதன்முதலில் கூறியவர் ‘சிக்மன் பிரைட்’ என்கிற ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வாழ்ந்த மருத்துவராவார்.
இவர் மனம்பற்றியும், அதன் செயற்பாடுகள் பற்றியும், அதில் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியெல்லாம் தீவிரமான முறையில் ஆராய்ச்சி செய்து பல உண்மையான உலகிற்கு கூறினார். தன்னிடம் வந்த நோயாளிகளினது உடலில் எவ்வித நோயுமின்றி இருந்தாலும் அவர்களது உள்ளத்தில் குறைபாடுள்ளதைக் கண்டுபிடித்தார். மனநோய்க்கான உண்மைகளை கண்டறிந்து உலகின் கவனத்தைப் பெற்றார்.
எனவேதான் எங்களிடையே பலதரப்பட்ட மனநோயாளர்கள் காணப்படலாம். இவை உடல், உளவியல், சமூகவியல் காரணங்களினால் ஏற்படலாம். அவற்றை இல்லாமல் செய்வதற்கும், மனதை சந்தோசமாக வைத்துக் கொள்வதற்கும் ஆத்மீக வழிமுறைகளுக்கூடாக செயற்பட்டு வெற்றி கொள்ளல் வேண்டும். நமது நாட்டில் மனநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குகின்ற மிகப்பெரிய வைத்தியசாலையாக அங்கொட எனும் பிரதேசத்தில் உண்டு. இன்றைய தினத்தில் இதுபற்றிய அறிவை ஏனையவர்களுக்கும் வழங்கி மனநோய்த்தாக்கதின் பாரிய விளைவுகளிலிருந்து எம்மையும், எம் சமூகத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மனிததேவைகளில் உள்ளுணர்வைத் தூண்டும் பலமான ஊக்குவிப்புத்தேவைகள் அவசியமானதாகக் காணப்படுகின்றன. உளவியலாளர் மாஸ்லோவின் கூற்றுப்படி முழுமையான சுயதேவைகளே அவை என்கிறார். கல்வி உளவியலாளரான கால்ரோஜர்ஸ் தம்மிடம் சிகிச்சைக்காக வந்தவர்களிடம் காணப்பட்ட பிரச்சினைகளை ஆழமாகப் பார்த்தபோது அவை அனைத்தும் ஒரே அடிப்படையில் தோன்றியவை எனக்கண்டறிந்து அதற்கான தீர்வினை நோக்கிய ஆய்வில் வெற்றிகண்டார்.
மனிதனின் சுயதிருப்திக்கான தேவைகள் தடையாகும் போது அல்லது மறுக்கப்படுகின்றபோதுதான் அவனுள் விரக்தி, அமைதியின்மை, சந்தோசம், சந்தோசம், குற்றம் செய்கின்ற மனப்பாங்கு, மனமாற்றம், இம்சை போன்ற நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவேதான், இன்றைய இயந்திர உலகின் மாற்றத்திற்கு ஏற்ப எம்மை இவ்வகையான இடைஞ்சல்களிலிருந்து விடுவித்து சரியான பாதையில் பயணிக்கவும், மனநோய் எனும் உளநோயிலிருந்து விடுபடவும், சுயமான சிந்தனையின் அடிப்படையில் அன்பு, மகிழ்ச்சி, அழகியல் உணர்வுகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியுறுவதற்கும் திடசங்கற்பம் பூணுவோமாக.
எஸ்.எல். மன்சூர் (கல்விமானி)
தென்கிழக்கு துருவம் செய்தியாளர்

0 comments:
Post a Comment