(பஹமுன அஸாம்௦)
வரவு-செலவுத் திட்டம் நடைபெறும்போது ஆளும் கட்சியில் உள்ள எந்த அமைச்சருக்கும் வெளி நாட்டுப் பயணங்கள் செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அநுர பியதர்சன யாப்பா ஆகியோருக்கு மாத்திரம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதால் வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் பாரளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு 22ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 21 மே வரை வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

0 comments:
Post a Comment