Wednesday, November 16, 2011

இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை


(கலாநெஞ்சன்) 
இராணுவ கோப்ரல் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட இராணுவ வீரர் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பின்கன்த ஆராச்சிலாகே நிமல் என்ற முன்னாள் இராணுவ வீரருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பல வருடங்களாக தான் இராணுவத்தில் பணியாற்றியதாகவும். 7 தடவைகள் பயங்கரவாதிகளின் தாக்குதலால் காயமடைந்ததாகவும் .மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அந்த இராணுவ வீரர் விசேட கூற்றொன்றை விடுத்துள்ளார். இக் கொலைச் சம்பவம் 2004ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment