ரஷ்ய பரசூட் வீரர் ஒருவர் இந்தியாவின் இமாலய மலைப் பிரதேசத்தின் மேலே பறந்து கொண்டிருக்கும்போது கழுகு ஒன்றுடன் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மோதியவுடன் கழுகு பரசூட்டின் கயிறுக்குள் மாட்டிக் கொண்டது. அந்தரத்தில் தொங்கியவாறே கழுகை விடுவிப்பதற்கு பல முயற்சிகளைச் செய்தும் பலனளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பரசூட் பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது. ஆனால், குறித்த மனிதர் அதிர்ஷ்டவசமாக மேலதிகமாக வைத்திருந்த பரசூட்டை பயன்படுத்தியமையால் மரத்தில் மாட்டுப்பட்டு மயிரிழையில் காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

0 comments:
Post a Comment