Friday, November 04, 2011

நடிகை ஷகீலா மீது ஆபாசப்பட வழக்கு


பாளையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஷகீலா நடித்த ஆபாச படம் திரையிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் சென்சார் போர்ட் அனுமதிக்காத ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் பாளை பொலிஸார் அந்த தியேட்டரில் அதிரடி சோதனை நடத்தி ஆபாசப்பட ரீல்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தியேட்டர் அதிகாரி, நிர்வாகிகள் மற்றும் நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர்மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடிசியல் மஜிஸ்திரேட் நீதிமன்றில் நடந்து வந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதற்காக நடிகை ஷகீலா நெல்லை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.

சாதாரண பெண்போல் உடையணிந்து வந்து சென்றதால் அவரை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment