புலவாயோ டெஸ்டில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் "த்ரில்" வெற்றி பெற்ற, நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது. சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி, புலவாயோவில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 426, சிம்பாப்வே 313 ஓட்டங்கள் எடுத்தன.
இரண்டாவது இன்னில்ஸில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளர்" செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 366 ஓட்டங்கள் எடுத்தார் வெற்றி என்ற நிலையில், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், சிம்பாப்வே அணி 2 விக்கெடுக்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பிரண்டன் சதம்: ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மவோயோ அரைசதம் (52) அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த பிரண்டன் டெய்லர்-தைபு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரண்டன் டெய்லர் சதம் அடித்தார். தைபுவும் அரைசதம் அடிக்க, ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 101 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது.
"த்ரில்" வெற்றி: இந்நிலையில் பிரண்டன் டெய்லர் (117), தைபு (63) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. பின்வரிசையில் சக்கபவா (5), கியூபே (14), பிரைஸ் (4) ஆகியோர், பிரேஸ்வெல் வேகத்தில் வரிசையாக வீழ்ந்தனர். வாலர் (29) ஆறுதல் தந்தார். கடைசி 28 ஓட்டத்துக்கு, 5 விக்கெட்டை இழந்த, சிம்பாப்வே அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 331 ஓட்டங்களுக்கு சகலரும் ஆட்டமிழந்தனர், நியூஸிலாந்து அணி "த்ரில்" வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல் 5, வெட்டோரி 3 விக்கெட் வீழ்த்தினர்.




0 comments:
Post a Comment