"ஜெய் தெலுங்கானா" என்று சொல்லச் சொல்லி, நடிகை ஸ்ரேயாவின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர் தெலுங்கானா ஆதரவு போராட்டாக்காரர்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, தெலுங்கில் அல்லரி நரேஷ் உடன், ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் ஐதராபாத் அருகேயுள்ள பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.
அப்போது அங்கு வந்த தெலுங்கானா ஆதரவு போராட்டாக்காரர்கள் சூட்டிங்கை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். மேலும் நடிகை ஸ்ரேயாவிடம், "ஜெய் தெலுங்கானா" சொல்லச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், நடிகை ஸ்ரேயா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நடிகை ஸ்ரேயாவின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரேயா, சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் நடப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. "ஜெய் தெலுங்கானா" சொல்லச் சொல்லி என்னுடைய காரை அடித்து நொறுக்கிவிட்டனர். இதுதான் ஜனநாயகமா…? என்று வருத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்தபோது பொலிஸார் யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:
Post a Comment