Monday, November 14, 2011

தனியார் பஸ் போராட்டம் கைவிடப்பட்டது


(பஹமுன அஸாம்)  
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப் படவிருந்த தனியார் பஸ் உரிமை யாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டதாக தனியார் பஸ்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தற்போது தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனியார் பஸ் உரிமையளர்களுக்கும் தனியார் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது ஒரு மாதகாலத்துக்குள் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் எடுப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ. ரத்ணாயக்க தெரிவித்ததையடுத்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் தனியார் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒரு நாலைக்கு பல இலட்சம் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதகவும், அதனை ஈடுசெய்யும் விதத்தில் பழைய விலையிலோ அல்லது மானிய அடிப்படையிலோ எரிபொருளைத் தருமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அரச பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அரசதரப்பு ஊடகங்கள் இன்று காலையில் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment