Monday, November 14, 2011

14 நாட்களில் தேசிய அடையாள அட்டை


(பஹமுன அஸாம்)  
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தோருக்கு 14 நட்களில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அதுவும் இவை வீட்டுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவுத் தினைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் பெற்றுக் கொள்ளக் கூடிய விசேட சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காகவேண்டி மாணவர்கள் கட்டாயம் அலுவலகங்களுகஅகு வரவேண்டிய தேவை இல்லையென்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் யாரேனும் உரிய ஆவணங்களுடன் வந்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment