Tuesday, November 01, 2011

மிலேனிய அபிவிருத்தியின் இலக்கு


அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிலேனிய அபிவிருத்தியை நோக்கிய இலக்கினை அடைந்து கொள்ளும் பொருட்டு பிரதேசத்திலுள்ள 32 கிராம சேவைப் பிரிவிலிருந்தும் தலா 8 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான முன்னோடி கருத்தரங்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

இவ்விடயம் சம்பந்தமான விளக்கங்களை அட்டாளைச்சேனையின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ. லத்தீப், UNDP திட்ட இணைப்பாளர் ஏ.எம். உசைன் ஆகியோர் உரையாற்றினர். எதிர்காலத்தில் எமது நாட்டில் 8 விடயங்கள் அடிப்படையில் எதிர்வரும் 2015 ஆண்டில் மிலேனியத்தின் அபிவிருத்தியை நோக்கி நடைபோட அரசின் இத்திட்டத்திற்கு மக்கள் அனைவரும் முன்வருதல் வேண்டும். எதிர்காலத்தில் உலக நாடுகளுடன் எமது நாடும் ஒன்றாக கைகோர்த்து சென்று நாட்டு மக்களின் வாழ்வில் உன்னத நிலையை அடைந்து கொள்ளவும், வறுமை, கல்வி, சுகாதாரம், சிசுமரணம், பாலியல் சமத்துவம, நோயற்ற வாழ்வு போன்ற துறைகளில் அபிவிருத்தி கண்டு தன்னிறைவு காணவேண்டுமென்பதே இதன் இலக்குகளாகும்.

இதனை அடைவதற்குரிய பயிற்சிகளை நாடுமுழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. எனத் அங்கு தெரிவிக்கப்பட்டது.

அட்டாளைச்‌சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment