Tuesday, November 01, 2011

வித்யாபாலனை பதறவைத்த சில்க்கின் ஆவி


மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சில்க் சுமிதாவாக பாலிவுட் கவர்ச்சி நடிகையான வித்யாபாலன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக அவர் தினமும் 10 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறாராம். இதனால் அவரது பெற்றோர்கள் மிகவும் கவலையில் இருந்தனர். எப்படியோ அவர்களை சமாதனப்படுத்திய வித்யா பாலன் தொடர்ந்தும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் படப்பிடிப்பில் நடித்துவரும் வித்யாபாலன் திடீரென்று மயங்கி விழுந்தாராம்! அவரை உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. "இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குரைந்ததால் வந்த அனர்த்தம்" என்று கூறினர். உடனே வித்யா பாலனின் பெற்றோர்கள் 'சில்க் சுமிதாவின் ஆவியின் சேட்டைதான் இது' என்று சொல்லி அவர்களது சொந்த ஊரில் இருந்து மந்திரவாதிகளை அழைத்து வந்து வித்யா பாலனுக்கு பேய் ஓட்டி இருக்கிறார்கள். இப்போது பழைய நிலைமைக்கு திரும்பிய வித்யாபாலன் மீண்டும் படப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.


சில்க் சுமிதா தூக்கில் தொங்கிய சென்னை வீடு இப்போது அடுக்கு மாடி கட்டடமாகிவிட்டது. அங்கு எந்த சேட்டையும் இல்லையாம். இதில் இருந்து தெரிவது என்னவென்றார்ல் 'பேய்' பயம் தமிழ்நாட்டை மட்டுமல்ல மும்பையிலும் இருக்கிறது.

0 comments:

Post a Comment