(எஸ்.எல். மன்சூர்)
அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான கமநெகுமத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதாரமான முறைகளில் தங்களது நாளாந்த இயற்கைக் கழிவுகளை மேற்கொள்வதற்காக வேண்டி சிறந்த கழிவறைத் தொகுதிகளை உருவாக்கும் திட்டத்திற்கமை சுமார் 50 இலட்சம் செலவில் புதிய கழிவறைத் தொகுதிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் அட்டாளைச்சேனையிலுள்ள அல்-முனீறா பெண்கள் உயர்பாடசாலை, அறபா வித்தியாலயம், அல்-ஜென்னா வித்தியாலயம், மீனோடைக்கட்டு அ.மு.க. பாடசாலை, இக்ரஹ் வித்தியாலயம், பாலமுனையிலுள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலயம், தாருல் ஹசனாத், ஒலுவில் அல்-அஸ்ஹர் வித்தியாலயம், பாத்திமா வித்தியாலயம், அல்-அக்ஸா வித்தியாலயம், மற்றும் தீகவாபி சிங்கள மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment