Wednesday, November 30, 2011

நகை கொள்ளையர்கள் இருவர் கைது


(கலாநெஞ்சன்) 
75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபர்களிடமிருந்து, கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் தங்கச் சங்கிலியொன்றினையும் கொள்ளைச் சம்பவத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு நகரில் திருட்டு, மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment