Thursday, November 24, 2011

முன்னாள் பி. பாதுகாப்பு அமைச்சர் மரணம்


(பஹமுன அஸாம்) 
இலங்கை யின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை இன்று காலை கண்டி பொதுவைத்திய சாலையில் மரணமடைந்தார். வீட்டினுள் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் இவர் கண்டி பொதுவைத்தியசாலையின் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

1938ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த- 1994 முதல் 2001ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை- கண்டிமேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார். இவர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்  ஸ்ரீமாவோ பண்டாரநயாக்கவின் சகோதரரும் ஆவார்.

0 comments:

Post a Comment