Sunday, November 13, 2011

இனிப்பு பண்டங்களில் சீனிக்கு கட்டுப்பாடு


இனிப்பு பண்டங்கள், மென்பானங்கள் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் பக்கட்டுகளுக்கும் தற்போது பயன்படுத்தப்படும் சீனியின் அளவை 10% வீதத்திற்கும் கீழ் குறைப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் அடுத்தாண்டு முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். உலக நீரிழிவு நோயாளர் தினம் இன்று 14ஆம் திகதியாகும். இத்தினத்தை யொட்டிக் குறிப்பிடும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அச்சட்ட ஏற்பாட்டின் வரைவு வேலைகள் தற்போது நிறை வுற்றுள்ளன.

தொற்றா நோய்கள் இலங்கைக்குப் பெரும் சவாலாக மாறி வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு முன்கூட்டியே மேற்கொள் ளப்படுகின்றன. தற்போது இனிப்பு பண்டங்களுக்கும், மென்பானங்களுக்கும், சுவையூட்டப்பட்ட பால் பக்கட்டுகளுக்கும் சுமார் 80% சதவீதம் சீனி பயன்படுத்தப்படுகின்றது. இது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்றார்.

0 comments:

Post a Comment