இன்று திங்கட்கிழமை (14.11.2011) சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினமாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை துருவம் வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.
மனிதனை ஆட்டிப்படைக்கும் நோய்களுள் சர்க்கரை வியாதி எனும் சீனி நோயும் ஒன்றாகும். இது ஒருகாலத்தில் வசதியானவர்களுக்கு என்றிருந்த இந்தநோய் சிறுபிள்ளை தொடக்கம் குடுகுடு வயதானவர்களையும் தாக்கி உடலை மெலியவைத்து அனைத்து உறுப்புக்களையும் தாக்கி அழிவுக்குட்படுத்துகிறது. இன்று யாரைக் கேட்டாலும் எனக்கு சீனி கொஞ்சம் கூடுதலாக காணப்படுகிறதாம் என்பார்கள். நமது உடம்பில் எவ்வளவு சீனி அதாவது சர்க்கரை இருக்க வேண்டும் என்கிற மட்டம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சர்க்கரையின் அளவு சிறுநீரிலும் உண்டு, இரத்தத்திலும் உண்டு.
பொதுவாக நமது உடலுக்குத் தேவையான சத்துக்களில் ஒன்றுதான் இந்த சர்க்கரைச் சத்தாகும். நாம் உண்ணுகின்ற உணவுகளிலிருந்தே இந்த சர்க்கரை பெற்றுக் கொள்ளப்படுகின்றது. தானியங்கள், காய்கறி வகைகள், கிழங்கு மற்றும் பழங்கள் போன்றவற்றில் எல்லாம் இந்த சர்க்கரைப் பொருள் காணப்படுகிறது. இது நமது உடலுக்குத் தேவையான சர்க்கரையை கொடுத்துதவுகிறது. அதேவேளை நாம் உண்ணுகின்ற உணவுப் பொருளிலுள்ள மாப்பொருளையும் குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரை சத்தாகவும் மாற்றுகின்றன.
இதற்கு பித்த நீர் மற்றும் இன்சுலினும் இணைந்தே உடம்புக்கு சக்தியைப் பெற்றுக் கொள்ள உதவுகிறது. நாம் ஒவ்வொருநாளும் பல்வேறுபட்ட வேலைகளை செய்கின்றோம். இதற்குத் சக்தி தேவையாக உள்ளது. இந்த சக்தியை தருவதுதான் இந்த சர்க்கரையாகும். இந்த வகைச் சர்க்கரையை இயற்கையான சர்க்கரை என்றும் என்கின்றனர் வைத்தியர்கள். இது இரத்தத்தில் கலந்து செல்களுக்கு சென்று உயிரூட்டம் கொடுத்து நமது அன்றாட வேலைகளைச் செய்வதற்கு புத்துணர்ச்சியும், தெம்பும். கிடைக்க வழிசெய்கிறது.
ஆகவேதான் நமது உடலுக்குத் தேவையான சர்க்கரையானது ஒரு குறிப்பிட்டளவு நமது இரத்தத்தில் இருக்க வேண்டும். இதனால் இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்களுக்குச் சக்தியை அளிக்கக்கூடிய சர்க்கரையை இங்கே சேமித்துக் கொள்கிறது. செயற்கையான சர்க்கரையானது இனிப்புச் சுவையாக இருக்குமே தவிர நமது உடலுக்கு எவ்விதமாக பிரயோசனமும் இல்லை. அது தீமைக்கே வழிவகுக்கின்றது. இது அஜீரணமாகுவதை கெடுத்து, உணவைப் புளிக்கச் செய்து அஜீரணத்தை உண்டாக்கியும், வேறு பலவகையான நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது. வயிறு மந்தம், மலச் சிக்கல், நீரிழிவு நோய் போன்றனவும் ஏற்படுவதற்கு வழிசமைக்கிறது. ஆகவேதான் சிறுவயது முதல் கண்ட கண்ட இனிப்புப் பண்டங்களை உண்டு நமது உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் முதியோர்கள். உண்மையில் எதிலும் அளவு வேண்டும். ஆற்றில் போடுவதானாலும் அளந்து போடுங்கள் என்பதும் பழமொழியாகும். அதுபோல நாம்; உண்ணுகின்ற உணவில் சர்க்கரையின் அளவு கூடுகின்றபோது இரத்தத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு இரத்தத்தில் 80மில்லி கிராம் தொடக்கம் 120மில்லிகிராம் வரையில் சர்க்கரை காணப்பட வேண்டும். இனிப்பை அதிகமாகவே, குறைவாகவோ சாப்பிட்டாலும் இரத்தப்பரிசோதனையின் போது இதே அளவுகளில் காணப்பட வேண்டும். அப்போதுதான் உடம்பும் அதனை ஏற்றுக் கொள்கிறது. 180மில்லிகிராமானால் அங்கே நீரிழிவு நோய் எனக்கூறிவிடுகின்றனர். உடலில் மேலதிகமாகச் சேர்கின்ற சர்க்கரையானது சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகின்றது.
உடம்பில் சர்க்கரை அதிகமானால் கணையத்தின் தொழிற்பாடும் அதிகரிக்கிறது. கணையத்திலிருந்து சுரக்கப்படும் இன்சுலின் சுரப்பும், நீரும் படிப்படியாக குறைவடைந்து தளர்;ச்சியை கொடுக்கிறது. இன்சுலின் சுரப்பினது நீர் குறைவடைந்து நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் சிறுநீரகம், இதயம், மூளை, கண்பார்வை, சரும நோய்கள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்தக் குழுhய் அடைப்பு இறுதியில் மரணம் என ஏறாளமான நோய்களைத் தோன்றுவிக்கப்பட இந்த சீனியின் அதிகரிப்பு காரணமாக அமைகின்றது. ஆதலால்தான் இரத்தத்தில் அளவோடு சர்க்கரை இருக்கத்தக்கதாக நாம் இருக்க வேண்டும்.
சிறுநீர் பரிசோதனை செய்கின்றார்கள் அதிக சீனி இருக்கின்றதா? என்று பார்க்கிறோம். முக்கியமாக இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருக்கக்கூடாது. தற்போது மிக இலகுவாக கடைகளில் சர்க்கரையின் அளவை சில வினாடிகளில் கண்டுபிடிக்கத்தக்கதான இயந்திரங்கள் (றிவ்ளைட்டோ மீற்றர்) வந்துள்ளன. இதுபோல் இரத்தத்தை எடுத்து ஓன்கர் ஹார்மோன் அஸ்சே என்கிற கருவியில் ஹோர்மோனின் அளவை கண்டுபிடிக்கக் கூடிய கருவிகள் மூலம் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு பரிசோதனைகள் செய்த பிற்பாடேதான் நீரிழிவு நோயின் நிலைமையை அறிந்து மாத்திரையோ, இன்சுலின் ஊசி மருந்தோ கொடுத்து நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள் வைத்தியர்கள். தற்போது நீரிழிவு நோயானது சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் தாக்குகிறது. இந்நோய்க்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக இனிப்பு அதிகமாக சாப்பிட்டாலும் நீரிழிவு வரலாம். ஆகவேதான் நாம் இன்சுலின் சுரப்புக் குறையாமலிருக்க இரத்தத்தின் அளவு சீராக இருக்க சர்க்கரை நோய் எனும் பயங்கர நோயிலிருந்து பாதுகாப்புப் பெற உணவுக் கட்டுப்பாட்டையும், இனிப்பையும் அளவோடு உண்டு வழமோடு வாழ எம்மை நாம் வழிப்படுத்துவோம்.
- எஸ். எல். மன்சூர் (கல்மானி)
தென்கிழக்கு துருவம் செய்தியாளர்



0 comments:
Post a Comment