ஆறுகளில் ஆற்றுவாழை மற்றும் சல்வீனியா போன்ற நீர்த்தாவரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தி, வெள்ளம் ஏற்படுவதற்கான ஒரு காரணியாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களினதும், அட்டாளைச்சேனை, பாலமுனை போன்ற கிராமங்களினதும் மிகப்பெரியதோர் வடிச்சலாக கோணாவத்தை ஆறு இருந்து வருகின்றது.
இப்பிரதேசங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீரை கடலுக்குள் பாச்சுகின்ற இவ்வாற்றில் ஆற்றுவாழை, சல்வீனியா போன்ற நீர்த்தாவரங்கள் காணப்படுகின்றன. இதனால் நீர் ஓட்டம் தடைப்படுவதுடன், ஆறும் சேற்றுநிலமாக மாற்றம் பெற்று வருகின்றது. இதனை தடுத்து ஆற்றுவாழையினத்தை முற்றாக அழித்தொழித்து வெளியேற்றும் நடவடிக்கைளில் உரிய அதிகாரிகள் உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்




0 comments:
Post a Comment