இந்திய முழுவதும் வயதுக்குவந்த பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு (நப்கின்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசுமூலம் பெண்கள், மாணவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் இந்த நப்கின் வழங்கப்படும். பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த பாடசாலை நிர்வாகம் மூலமும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுகாதாரத்துறை அலுவலகர்கள் மற்றும் கிராமப்புற ஊழியர்கள் மூலமும் வழங்கப்படவுள்ளது.
2 மாதத்திற்கு ஒருமுறை 6 எண்ணிக்கையைக் கொண்ட 3 பைக்கற்றுகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 18 பைக்கற்றுகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கும் செல்லுபடியாகும். இரும்புச்சத்து மாத்திரை, குடற்புழு நீக்கல் மாத்திரை மற்றும் வளர் இளம்பெண் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்படும்.
நாட்டிலேயே முதன்முதலாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 44 கோடியே 21 இலட்சம் இந்திய ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுகாதாரம் பேணப்படும். தொற்றுநோய் பரவும்விதம் குறைக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment