Thursday, November 10, 2011

மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கல்


(எஸ்.எம். அறூஸ்)
சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எஸ். இப்ராலெப்பை கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஹம்மாம் மற்றும் தொற்றா நோய் வைத்தியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு மாணவர்களுக்கு, மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கி வைத்தனர்.




0 comments:

Post a Comment