அக்கரைப்பற்று–கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் நகரத்தின் எல்லையினுள் பல நெல்குற்றும் அரிசி ஆலைகள் காணப்படுகின்றன. இலங்கையின் நெற்களஞ்சியம் எனப்படும் அம்பாறை மாவட்டத்தில் அதிகமான நெல் குற்றும் ஆலைகளும், களஞ்சியசாலைகளும் நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில் அமைந்துள்ளதுடன் இவைகள் பிரதான பாதையின் ஓரங்களிலும் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு குற்றப்படும் நெல்லிருந்து வெளியாகும் உமித்தூள் (உமி, தவிடு) பாதசாரிகளை மாத்திரமன்றி வாகனங்களில் பயனம் மேற்கொள்பவர்களது கண்களினுள்ளும் சென்று கண்ணை பாதிக்க வைக்கின்ற ஒரு நிலமைக்கு இட்டுச் செல்லுக்கின்றன என பாதசாரிகளும், பயணம் மேற்கொள்பவர்களும் முறையிடுகின்றனர்.
பல ஆண்டுகளாக இப்பிரதேசத்தில் இத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் மிகவும் தொழில்நுட்பம் கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். இங்கிருந்து வெளியாகும் துகள்கள் பரவாது தொழிலை செய்யக் கூடிய நுட்பங்கள் வந்துள்ளன. இதனை மில் உரிமையானர்கள் கவனத்திற்கொண்டு நடடிவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். பொதுவாக மக்கள் நிரந்த குடியிருப்புக்களாக வசிக்கின்ற பிரதேசதங்களில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற தொழில்சாலைகளை அமைப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை.
ஒருகாலத்தில் இப்பிரதேசத்தில் மக்கள் வசிக்காது இருந்தனர். ஆனால், தற்போது இப்பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன. எனவே. மக்களின் சுகநலத்தில் அக்கரை கொள்ளும் அதிகாரிகள் இதனைக் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நிந்தவூர் பிரதேச சபையினரும் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாதசாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்





0 comments:
Post a Comment