ஒலுவில் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் திடீரென சுனாமி எச்சரிக்கை ஒத்திகை ஒன்றினை மேற் கொண்டபோது மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். சுனாமி ஏற்படுகின்றபோது மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலம் அறிவித்த ஒரு சில நிமிடங்களில் மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு பிரதான வீதியை நோக்கி ஓடியதாக ஒத்திகையில் ஈடுபட்ட அனர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட்டால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட கரையோரங்களில் இவ்வாறு நடாத்தப்பட்டுவருகின்ற ஒரு கட்டமாகவே இது இடம் பெற்றது என அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிகழ்வில் அனர்த்தப்பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.
அண்மைக்காலமாக ஒலுவில் துறைமுகப் பிரதேச கரையோரம் கடல் காவு கொண்டு வருகின்ற நிலைமையில் இந்த ஒத்திகை நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்


0 comments:
Post a Comment