Saturday, November 05, 2011

கிழக்கில் களைகட்டும் ஹஜ் பெருநாள்


கடந்தசில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணம் ஓரிரு நாட்களாக மழை பெய்வது குறைவடைந் துள்ளமையினால் எதிர்வரும் 7ஆம் திகதி கொண்டாடப்படவிருக்கும் முஸ்லிம்களின் புனித ஹஜ்பெருநாள் களைகட்டத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்களது புத்தாடைகளை வாங்குவதிலும், ஏனைய பொருள் கொள்வனவு செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருவதை காணக்கூடியதாக உள்ளதுடன், தெருவோர வியாபாரிகள் தங்களது வியாபார நடவடிக்கைகளில ஈடுபட்டு வருகின்றதையும் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.





(இரவு நேரத்தில் தெருவோர வியாபார நிலையமொன்றின் முன்னால் பொதுமக்கள் வாங்குவதை இப்படங்கள் காட்டுகின்றன)

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment