கேஷ் விலையை உயர்த்துவது குறித்து எதிர்வரும் இரு நாட்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. கேஷ் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என கேஷ் சங்கங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதனால் எதிர்வரும் இரு நாட்களுக்குள் நுகர்வோர் அதிகார சபையினர் ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை கேஷ் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்திற்கு அமைய நபம்பர் மாதம் 1ஆம் திகதியுடன் கேஷ் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இதற்கு முன்னர் ஓகஸ்ட் மாதம் கேஷ் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டபோது கேஷ் சிலிண்டர் ஒன்று 156 ரூபாவால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment