தரம் 8இல் கல்விகற்கும் மாணவன் ஒருவன் அதே வகுப்பைச் சேர்ந்த சக மாணவன் ஒருவனால் கல்லால் தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவமொன்று திங்கட் கிழமை றம்புக்கணையில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கணை புகையிரத நிலையத்து அருகே பி. ப. 2.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வஹவ, பங்களாவத்தையைச் சேர்ந்த 13 வயதான எச்.பீ. தமித் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். அப்பிரதேசத்தைச் சேர்ந்த பராக்கிரம வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் இவ்வாறு கைகலப்பாக மாறியுள்ளது.
ஆத்திரமுற்ற சக மாணவன் வீதியிலிருந்த பெரிய கல்லொன்றை எடுத்து தமித்தின் தலையில் அடித்துள்ளார். காயமடைந்த தமித் உடனடியாக றப்புக்கண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் தமித் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

0 comments:
Post a Comment