(கலாநெஞ்சன்)
கடல்நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக நாட்டினுள் உவர் நீர் கலக்கும் தன்மை அதிகரித்துள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வாக பசுமையான கடற்கரைகளை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதனை நீண்டகால திட்டமாக முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாகவும், பசுமையான கடற்கரையை உருவாக்குதல் மற்றும் அதனை பராமறித்தல் பணிகளில் கடற்படையினரதும் பிரதேச மக்களினதும் பங்களிப்பை பெற்றுக் கொள்ள எண்ணியுள்ளதாக கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment