Sunday, November 20, 2011

முனவ்வறா புலமைப்பரிசில் பாராட்டு விழா


(எஸ்.எல்.மன்சூர்) 
இவ்வாண்டு ஆகஸ்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களைப் பாராட்டி கௌரவம் வழங்கி நிகழ்வொன்று அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.ஏ.ஜவாத், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கரைப்பற்று மாநாகரசபை மேயர் ஏ.ஏ.அகமட் சக்கி மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் அஸ்ஸெய்க். ஏ.எல்.எம். காசீம், அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர். எம்.சி. ஆதம் லெவ்வை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு மாணவர்களின் பெற்றோர்களது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கல்லூரியிலிருந்து இம்முறை 50 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்திருந்தனர்.  இவர்களுக்கு பாராட்டும் பதக்கம், மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. அக்கரைப்பற்று வலயத்தில் அதிகமான மாணவர்களை உயர் புள்ளிகள் பெற்று சித்தியெய்திய பாடசாலை இதுவாகும்.






0 comments:

Post a Comment