Sunday, November 20, 2011

ந. ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிப்பு


(பஹமுன அஸாம்) 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று அலரி மாளிகையில் வைத்து ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சித்தன் ரஞ்சன் டி சில்வா கையளித்தார். 

கடந்த வருடம் மே மாதம் 15இல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இந்த நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. மக்களிடமிருந்து வாய்மூலமாகவும், எழுத்து மூலமாகவும் 57 இடங்களில் வைத்து மக்களினதும் அரசியல் பிரமுகர்களினதும் வாக்குமூலங்கள் இதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 6 ஆயிரம் பேர் தங்களது சாட்சியங்களை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 பேரைக்கொண்ட ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளில் 400 பக்கங்களை கொண்ட அறிக்கையே இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment