Wednesday, November 16, 2011

இப்படியும் ஒரு விளம்பரம்! பாருங்களேன்


அண்மையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் தனியார் நிறுவனமொன்று பிரதான வீதியின் ஓரத்தில் ஒரு பெரிய சீலையினுள் மின்விசிறியை வைத்து இயக்கிவிட்டு வேடிக்கை காண்பித்தனர். சீலையோ பாம்புபோல் நெழிந்து, வளைந்து சென்றதை அனைவரும் ஒருபார்வை பார்த்துவிட்டே சென்றனர்.

அவ்வாறு நின்று பார்க்கின்றபோது அவர்கள் வியாபாரத்தை நடாத்த முயற்சிக்கின்றனர். வியாபாரத்திற்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது வீட்டுக்குவீடு பொருட்களை கொண்டுவந்து எடுங்கள் எங்கின்றர். குறிப்பாக கைத்தொலைபேசி "சிம்" களை வீட்டுக்கு வந்து இலவசமாக தருகின்றோம், இதில் 100, 50 எல்லாம் இருக்கு என்கின்றனர். நாட்டில் மலிவான ஒரு பொருள் இந்த சிம்கள்தானாம் என்கிறார் ஒரு வயதானவர். பார்தீர்களா எப்படியொரு வியாபாரம்? ஆனால், நம்நாட்டில் அத்தியவசியப் பொருட்களின் விலையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்…?



- துருவம் அபிமானி

0 comments:

Post a Comment