Monday, November 14, 2011

அட்டாளைச்சேனையில் வாசிப்பு மாதம்


(எஸ்.எல்.மன்சூர்)  
இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாதக் கொண்டாட்டம் எதிர்வரும் டிசம்பர் ஏழாம் திகதி புதன்கிழமை முழுநாள் நிகழ்வாக நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இப்பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, வாசிப்பு பற்றியும், நூலகத்தின் செயற்பாடுகள் பற்றியும் கருத்துக்களை வழங்கவென பேச்சாளர்களையும் அழைக்கவெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நினைவு மலரொன்றும் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் நடாத்தி முடிப்பதற்கான பல குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன. அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உறுப்பினர்களான என். யாசீர், ஏ. மனாப் மற்றும் அட்டாளைச்சேனை பொதுநூலக உத்தியோகத்தர்கள் உட்பட பல புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பித்தனர். விழா இனிதே நடைபெற அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டிக் கொண்டார் பிரதேச சபையின் தவிசாளரான ஏ.எல்.எம்.நஸீர். 



0 comments:

Post a Comment