(எஸ்.எம். அறூஸ்)
முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண படசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் பெற்ற டி.எப். நுஸ்தா மற்றும் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற டி.எப்.றிப்னா ஆகியோரைப் பாராட்டும் நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் நடைபெற்றது.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாடசாலை அதிபர் வீ.ரி.எம். ஹனீபா மௌலவி சான்றிதழ் வழங்கிக் கௌரவிப்பதையும், அருகில் பிரதி அதிபர்களான ஏ.சி. ஹரீஸ், சரீனா உம்மா மற்றும் உதவி அதிபர் அப்துல் பத்தாஹ் நிற்பதையும் படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment