(எஸ்.எல். மன்சூர்)
கடந்த ஒக்டோபர் மாதம் முழுவதும் தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனைவரும் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ள பல்வேறு சிந்தனை ஊட்டும் விழிப்புக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே. அந்தவகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினரும் எதிர்வரும் நாட்களில் வாசிப்பு மாதத்தின் சிறப்பை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனைகளும், கருத்தரங்குகளும் தொடராக நடைபெற்று வருகின்றன. அதன் இன்னொரு ஆலோசனைக் கூட்டம் இன்று (14.11.2011) திங்கட்கிழமை பி.ப. 4.00 மணிக்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பல்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.


0 comments:
Post a Comment