Thursday, November 24, 2011

மட்டக்களப்பில் நீரிழிவு நோய் கண்காட்சி


மட்டக்களப்பு நீரிழிவு சங்கம் ஆதரவுடன் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் (3ஆம் ஆணி) இணைந்து நடாத்தும் "நீரிழிவு நோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வுக் கண்காட்சி" எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பிரதான மண்படத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி அன்றைய தினங்களில் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை நடைபெறும். இலவச மருத்துவ ஆலோசனைகள், குருதிப் பரிசோதனைகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பன அங்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment