Sunday, November 20, 2011

அக்கரைப்பற்றிலும் ஜனாதிபதிக்கு மரநடுகை


(றிஸான் முகம்மட்)  
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டியும், இரண்டாவது பதவியேற்பின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டியும்  அக்கரைப்பற்று மாநகரசபை ஏற்பாடு செய்த மரநடுகை வைபவம் அதாஉல்லா அரங்க முன்றலில் நடைபெற்றது. மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மரநடுகை வைபவத்தை ஆரம்பம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதி மேயர் எம்.எம்.எம். றிஸாம், மாநகர சபை உறுப்பினர் கே.எல்.எம்.ஸறூக், செயலாளர் எம்.ஐ.ஏ.லத்தீப் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்றிலுள்ள அரச அலுவலகங்கள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள், பொதுஇடங்கள், வீதி ஓரங்கள் என்பனவற்றிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநகர மேயர் அஹமட் ஸக்கி மேற்கொண்டுள்ளார்.

சுத்தமான, பசுமையான நகரமாக அக்கரைப்பற்று மாநகரம் பிரகடனப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழ மரங்கள், நிழல் மரங்கள் என்பன அதிகளவில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரநடுகை வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு மாநாகர குடியிருப்பாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதுடன், மாநகர சபையால் நடப்படும் மரக்கன்றுகளை பாதுகாப்பதற்கும் முன்வரவேண்டும். மனதிற்கு புத்துணர்ச்சியும், மக்களுக்கு நன்மையுமளிக்கும் மரக் கன்றுகளை ஆர்வத்துடன் நட்டு பராமரிக்க வேண்டும். அதற்கு மாநகர சபையின் முழுமையான ஒத்துழைப்பும் அனுசரணையும் என்றும் கிடைக்கும் எனவும் மேயர் ஸக்கி கருத்து வெளியிட்டார்.



0 comments:

Post a Comment