Sunday, November 20, 2011

அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம்


(கலாநெஞ்சன்) 
அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம் என்ற தொனிப் பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு ஐயவர்தன நிலையத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. இணையத்தளங்களுக்கான தடைகளுக்கு தொடர்பாகவும், அரசியல் வன்முறைகள் தொடர்பாகவும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கான உரிமையை வெற்றி கொள்வதற்கான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு விஷேட உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பிரஜைகளின் உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான சட்டத்தரணிகள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிழ்வில் மாதுலுவே சோபித்த தேரர்,  சட்டத்தரணிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள் என பலரும் உரையாற்றினர்.

ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ,ஜனநாய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைவர் சிறிதஜங்க ஜயசூரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment