Saturday, November 05, 2011

இணையத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு


இலங்கை மற்றும் இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் செய்தி இணையத்தளங்கள் ஊடக அமைச்சில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சில செய்தி இணைய தளங்களில் தனிப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு களங்களம் ஏற்படக் கூடிய வகையிலான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் இதுதொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும வகையில் செய்திகள் வெளியிடப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் மற்றும் முக்கிய பிரபுக்களின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில செய்தி இணையத் தளங்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஊடக ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் இந்த செய்தி இணைய தளங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசமான ஊடக பிரசூரங்களை ஊக்குவிக்க முடியாது எனவும், இந்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கைச் செய்திகளை வெளியிடும் சகல இணைய தளங்களும் ஊடக அமைச்சில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பாடல் மற்றும் ஊடக ஒழுக்க விதிகளையும் இலங்கை சட்டங்களையும் மதிக்கும் வகையில் செய்தி ஊடகங்கள் பணியைத் தொடர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment