Saturday, November 05, 2011

றிபாய் றாதீப் நிகழ்வுடன் மாபெரும் கந்தூரி


அக்கரைப்பற்று ஸாவியத்துல் ஹல்லாஜியா மத்ரஸதுல் ஆயிஷா வின் ஸ்தாபகரான அல்-குத்ப், அஷ்செய். ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜூல் மன்ஸுர் (றஹ்) அவர்களின் 7ஆம் வருட கத்முல் குர்ஆன் தாமாம், அல்-ஹாபிழ் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யில், ஜிஸ்திய்யி, றிபாயிய்யி, நக்ஷபந்தி அவர்களினது 44ஆவது கத்முல் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19.11.2011 ஆம் திகதியன்று மாபெரும் கந்தூரி வைபவம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் ஏக கலீபாவான அஸ்-ஸெயித், அஸ்ஷெய்க், அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று -பொத்துவில் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் காதிரிய்யா பள்ளிவாசலில் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளில் நாட்டின் நாலா பாகங்களில் இருந்து கலந்து கொள்ளும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் எதிர்வரும் 09.11.2011 அம் திகதிமுதல் கொடியேற்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் எதிர்வரும் 19.11.2011 ஆம்திகதி பி.ப.3.00 மணிக்கு கத்முல் குர்ஆன் தமாமும் நாட்டின் சுபீட்சம், ஒற்றுமை, சமாதானம் வேண்டி மாபெரும் துஆப் பிரார்தனையும் இடம்பெறவிருப்பதாகவும் கலிபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் (ரஹ்) அவர்கள் இப்பிரார்த்தனையை நிகழ்த்தவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஷ்செய்யித் அலவி மௌலானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.





அல்-ஹாபிழ் ஹல்லாஜூல் மன்ஸுர் (றஹ்) 
அல்-ஹாபிழ் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) 
அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) 

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment