ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவி பறிபோய்விடும் என்று அஞ்சி வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்து வருகிறார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பல கட்சிகளாக உடைந்து ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
வலுக்கட்டாயமாக தன்னை தலைவர் பதவியில நிலைநிறுத்தியிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்த தலைவராக சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரிய வந்துவிடக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் தற்காலிகமாக இவர்களை தலைவர் பதவிக்கு அமர்த்துவதற்கு அஞ்சியே இவர் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருகின்றார்.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:
Post a Comment