Tuesday, November 01, 2011

கிரண்ட்பாஸ் சூடு - 10 பொலிஸார் கைது


கிரண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 10 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு-வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 8 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் ஒரு உப பொலிஸ் பரிசோத‍கரும் உட்பட 10 பேர் அடங்குகின்றனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி கிரண்ட்பாஸ் பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு இவர்கள் சென்றிருந்தபோது அங்கு சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் குற்றத் தடுப்பு திணைக்களப் பிரிவினர் சந்தேகநபர்களான பொலிஸாரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

0 comments:

Post a Comment