Thursday, November 03, 2011

கடல் அலைக்குள் சிக்குண்டு மீனவர் மரணம்


அக்கரைப்பற்று மாநகரத்தின் 5ஆம் குறிச்சியில் வசித்துவந்த மேசன் தொழில் செய்து வந்த பைரூஸ் எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று புதன்கிழமை (02.11.2011) அக்கரைப்பற்று முகத்துவார பிரதேசத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலலைகளின் தாக்கத்துள்ளாகி இறந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக இப்பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் மேற்படி நபர் கடலும், ஆறும் சங்கமிக்கின்ற முகத்துவாரப் பகுதியில் வலைவீசி மீனைப் பிடித்து கொண்டிருந்தபோது பாரிய கடலலைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளாக கூறப்படுகின்றது. அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலம் இன்று வியாழக்கிழமை (03.11.2011) காலை 40ஆம் கட்டைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர். 

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment