Wednesday, November 02, 2011

அக்கரைப்பற்று வலய ஆசிரியர்கள் சம்பியன்


கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் (2011.10.27) நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர்களின் கிரிக்கெட் அணி இவ்வாண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவின்போது அகில இலங்கை ரீதியில் 32 அணிகள் பங்குபற்றின. இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று வலயக் கல்வி அணியும் கிண்ணியா கல்வி வலய அணியும் தெரிவு செய்யப்பட்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அக்கரைப்பற்று வலய ஆசிரியர் குழுவின் அணித்தலைவர் க.ஹமாமுதீன் அதிபர் தலைமையில் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு 39 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கிண்ணியா வலய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். 13 ஓட்ட வித்தியாசத்தில் அக்கரைப்பற்று கல்விவலய ஆசிரியர்கள் அணி வெற்றிபெற்று இவ்வாண்டிற்கான கிரிக்கெட் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதோடு தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளது.





இதே அணியினர் சென்ற 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று கல்வி வலய அணியின் விபரம்
  1. கே. ஹமாமுதீன் (தலைவர்)
  2. ஏ.எல். பாயிஸ்
  3. ஏ.ஜீ. சமூர்
  4. ஜே. பஸ்மீர்
  5. ஏ.ஜி. றிஸ்வான்
  6. எம். அஜ்மல்
  7. ஏ.எம். சியாத்
  8. எம். பிர்னாஸ்
  9. ஏ.எல். றிலாஸ்
  10. எம். பௌசான்
  11. எஸ்.எல். அப்ராஜ் ரிலா
  12. எம்.எம். நஜீப்
  13. எம்.ஏ. ஆரிப்

அட்டாளைச்சேனை துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment