தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இந்தியாவில் நீண்டகாலமாக தேடப்பட்டு வரும் நபரான தாவூத் இப்ராஹிம்முக்கு இரண்டாவது தடவையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிலவேளை மரணமடைந்தால் தனது உடலை மும்பை அல்லது அருகில் உள்ள தனது சொந்த கிராமத்திலோ அடக்கம் செய்யுமாறு தனத் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாவட்டத்தின் கேட் எனும் ஊரை பிறப்பிடமாக கொண்ட இப்ராஹிம் தாவூத், மும்பை தீவிரவாத தாக்குதல்கள் உட்பட, பல்வேறு சட்டவிரோத செயயல்களில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார்.
அவருக்கு பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்து வைத்திருப்பதாகவும் இநியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், 56 வயதாகும் தாவூத் அண்மைக்காலமாக மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், தான் மரணத்தில் கடைசி நாட்களில் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:
Post a Comment