Monday, November 07, 2011

ஆசிரியர்களின் பெருநாள் கொண்டாட்டம்

நேற்று (07.11.2011)புனித ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லீம்கள் கொண்டாடினர். பள்ளிகளில் தொழுதுவிட்டு உற்றார் உறவினர்களைச் சந்தித்து உறவைப் புதுப்பிப்பது, அன்பைப் பரிமாறுவது வழமை. ஆனால், அக்கரைப்பற்று வலயத்தின் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள ஒரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியரும், பாடசாலையின் அபிவிருத்தி செயலாளரும் வித்தியாசமான முறையில் பெருநாளைக் கொண்டாடியுள்ளனர்.

விடயத்திற்கு வருவோம். பாடசாலையின் அதிபரான ஏ.எல். அன்வர், ஆசிரியரான எஸ்.எல்.நயீம், எஸ்டிஎஸ். செயலாளர் ஏ.எல்.ஜெலீல் ஆகியோர் அன்றைய தினம் காலையில் பள்ளியில் தொழுதுவிட்டு நேரே பாடசாலைக்கு வந்து அங்குள்ள பூக்கண்றுகள் மற்றும் ஏனைய தாவரங்களுக்கும் நீர் ஊற்றி மகிழ்ந்தனர். உண்மையில் இவர்கள் அண்பை தாவரங்களுடன் பரிமாறியுள்ளனர். அதுவும் உயிருள்ளவைதானே. இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளில் வெறுமையாகவுள்ள நிலங்களை எத்தனைபேர் சரியாக பயன்படுத்துகின்றனர். மாணவர்களும், ஆசிரியர்களும், சமூகமும்  சேர்ந்து பயிர்களை நட்டினால் எவ்வளவு பிரயோசனமாக இருக்கும். இதற்கு இப்பாடசாலை முன்னுதாரணமாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.


தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment