Monday, November 07, 2011

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

நேற்று ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஒருநாள் மட்டும் லீவாக இருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்படுகின்றன. நேற்று முஸ்லீம்களின் பெருநாள் என்பதற்காக இலங்கை அரசு நேற்றைய தினத்தை விசேட லீவாக கருதி பொதுவிடுமுறையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முஸ்லீம் சமுதாயம் நன்றி தெரிவிக்கின்றது. இன்று பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படுவதுடன், எதிர்வரும் வாரங்களில் மூன்றாம் தவணைக்கானக்கான பரீட்சைகளும், மதிப்பீடுகளும் நடைபெறவிருப்பதுடன், கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக்கல்விக்கான செயலட்டை மதிப்பீடுடுகளும் இவ்வாரத்திலிருந்து ஆரம்பமாகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கிழக்கு துருவம் செய்தியாளர் எஸ்.எல்.மன்சூர்

0 comments:

Post a Comment