Thursday, November 03, 2011

சாய்ந்தமருதில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு


கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்த மருது சுகாதார நிலையத்தில் இரவுக் காவலாளியாகக் கடமையாற்றிய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அவர் கடமை புரியும் சுகாதார நிலையத்தில் வைத்தே இந்தச் சடலம் மீட்கப்டடுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

கல்முனைக்குடி, கடற்கரை வீதியைச் சேர்ந்த 45 வயதான முஹம்மது இப்றாஹிம் நஜிமுத்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment