Sunday, November 27, 2011

இந்தியாவில் பஸ்நிலையத்தில் பிரசவம்


இந்தியாவின் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு, மதுரைக்குப் போவதற்காக கணவருடன் வந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பஸ் நிலையத்திலேயே பிரசவ வலி ஏற்படவே, பெண் பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர் உதவியுடன் அங்கிருந்து பாமஸி கடையில் சுகப் பிரசவம் நடந்தது. அழகான ஆண்குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவர் தனது கணவர் ரமேஷுடன் சென்னை வடபழனியில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரியை மதுரையில் உள்ள தாய் வீட்டில் பிரசவத்துக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்தார் ரமேஷ். இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இருவரும் வந்தனர்.

பஸ் நிலையத்தில் பாண்டீஸ்வரியை அமரவைத்து விட்டு மருந்து வாங்குவதற்காக போனார் ரமேஷ். இந்த நேரம் பார்த்து பாண்டீஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரைப் பார்த்த அங்கிருந்த பெண் உதவி இன்ஸ்பெகட்ர் ரபி தேவி என்பவர் உடனடியாக அருகில் இருந்த பெண்களின் உதவியுடன் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அப்பல்லோ பார்மஸி கடைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு பாண்டீஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நிறைமாத கர்ப்பிணிக்கு பார்மஸியில் குழந்தை பிறந்த செய்தி பரவியதும் பஸ் ஸ்டாண்ட்டில் இனிய அதிர்ச்சி பரவியது. பலரும் அங்கு கூடி விட்டனர். பின்னர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பாண்டீஸ்வரியை அவரது கணவருடன் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment