தற்போது பெய்துவரும் கடும்மழை, மண்சரிவு, கடல்கொந்தளிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளதோடு 40 பேர் காயமடைந்துள்ளளனர். 43 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் பாதிப்படையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
நேற்றுமுன்தினம் 26ஆம் திகதி இரவு 8 மணிவரையில் சீரற்ற காலநிலையால் 11,871 குடும்பங்களைச் சேர்ந்த 48,768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 1738 பேர் 5 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காற்று மற்றும் மண்சரிவால் 587 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 3735 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
பின்னிணைப்பு:
பின்னிணைப்பு:
இன்றைய திங்கட்கிழமை கணக்கீட்டின்படி....
உயிரிழந்தவர்கள் - 22 பேர்
காயமடைந்தவர்கள் - 41 பேர்
காணாமல்போனோர் - 19 பேர்
நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் - 16,945
நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் - 66760 பேர்
அமைக்கப்பட்டுள்ள 6 தற்காலிக முகாம்கள் 424 குடும்பங்களைச் சேர்ந்த 1705 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

0 comments:
Post a Comment