(பஹமுன அஸாம்)
சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்கள் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் 18 மில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத மின்சாரம் பெறுதல் தொடர்பில் கடந்த மாதம் 238 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதில் 177 சுற்றிவளைப்புக்கள் மீற்றர் பெட்டியை கள்ளத்தனமாக அகற்றியமை தொடர்பிலும் மற்றைய 61 சுற்றிவளைப்புக்கள் சட்டவிரோத முறையில் மின் இணைப்புக்களை பெற்றமை தொடர்பிலும் அமைந்ததாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment