Friday, November 04, 2011

குடும்பக் கட்டுப்பாடு செய்தால் 'நனோ' கார்


"குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள், நானோ கார் ஒன்றை பரிசாக பெறுங்கள்." இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பரம், ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு, ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில், ஆண்களை கவரும் விதமாக, அரசு அதிகாரிகள், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்தாண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து, டிசம்பர் மாத இறுதிக்குள், மாநில அரசின் சார்பில், மாவட்டத்தில் ஏற்பாடு செய்யும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை முகாம்களில் பங்கேற்று, அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு, விலையுயர்ந்த பல பரிசுகள் வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களின் பெயர்களை, குலுக்கல் முறையில் தெரிவுசெய்து, 1ஆவது அதிர்ஷ்டசாலிக்கு, "நானோ" கார் ஒன்றை பரிசாக அளிக்கிறோம். அடுத்தடுத்த அதிர்ஷ்டசாலிகளுக்கு, மோட்டார் சைக்கிள், ரீ.வி., ரெப்ரிஜிரேட்டர் போன்றவை பரிசாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடும்பக் கட்டுப்பாட்டுச் சிகிச்சையில் குறிப்பிட்ட இலக்கை எட்டும் வாய்ப்பும் கிடைக்கும் என நம்புவதாக, மாநில அரசின் உயர் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment