ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.
முதலில் சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப் பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன் இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார் அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள் பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம். இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும் விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தை என்னவாக வருவார் என்ற கேள்வி இப்பொழுதே பட படக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் பிறந்த எண்ணை கணக்கிட்டுப் பார்த்த பிரபல எண்ணியல் நிபுணர் தாய்வாக்ன சர்மா, இந்த குழந்தை சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.
ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்கு கடந்த திங்கட்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்த திகதியை கணக்கிட்ட எண்ணியல் வல்லுனர் தாய்வாக்ன சர்மா, அந்த குழந்தை மிகச்சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற நாளிதழ் ஒன்று இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளது. ஐஸ், அபிஷேக் தம்பதியரின் மகள், அவரது பாட்டனார் அமிதாப் பச்சனைப் போல சிறந்த பேச்சாற்றல் திறமை கொண்டவராகவும் வர வாய்ப்புள்ளதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முப்பாட்டனார் அதாவது அமிதாப்பின் தகப்பனார் ஹரிவன்ஸ் ராய் பச்சனைப் போல சிறந்த எழுத்தாளராக வருவாரா என்றும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அமிதாப் பச்சன் தனது பேத்தியை மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி சாலையில் படிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கலைத்துறை சார்ந்த படிப்பில் பேத்திக்கு விருப்பம் இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். குட்டிக்குழந்தைக்கு ஐஸைப் போலவே அழகிய கண்கள் அமைந்திருப்பதில் பெற்றோர்களும், தாத்தா, பாட்டியும் பெருமிதம் கொண்டுள்ளனர்.
எது எப்படியோ அந்த குழந்தை உருவானது முதல் பிறக்கும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தற்போது பிறந்து சில நாட்களிலேயே என்னவாக வரப்போகிறது என்ற கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. பிறப்பதற்கு பெட் கட்டியவர்கள் இதற்கும் பெட் கட்டுவார்களோ என்னவோ?


0 comments:
Post a Comment