வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருடம் சிறைத்தண்டனை வழங்கி இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அத்துடன் 5000 ரூபா அபராதமும் செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் எனவும் மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார். இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செயப்பட்ட வழக்கின் விசாரணையே டிரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

0 comments:
Post a Comment